Photo Album: கழுத்தில் புது தாலியுடன் ஜொலிக்கும் காளிதாஸ் மனைவி.. கூடி நின்று வாழ்த்தும் குடும்பத்தினர்
நடிகர் காளிதாஸ் – தாரிணியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
காளிதாஸ் ஜெயராம்
நடிகர் ஜெயராம்- நடிகை பார்வதி ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் தான் நடிகர் காளிதாஸ் ஜெயராம்.
இவர், மீன் குழம்பும் மண்பானையும், ஒரு பக்க கதை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். சமீபத்தில் வெளியான ராயன் படத்தில் தனுசுக்கு தம்பியாக நடித்திருப்பார்.
அத்துடன் விக்ரம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான பாவ கதைகள் தொடரில் காளிதாஸ் நடித்த திருநங்கை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது.
இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் காளிதாஸ் ஜெயராம் மாடல் அழகி தாரிணி காளிங்கராயனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் எளிமையான முறையில் குருவாயூர் கோவிலில் நடந்து முடிந்தது.
இதன் போது எடுத்து கொண்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தம்பதிகளாக பார்த்த இணையவாசிகள் திருமண வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |