ஷபானாவிடமும் லீலையை காட்டினாரா மாதம்பட்டி ரங்கராஜ்? பாடகியால் கிளம்பிய புதிய சர்ச்சை!
பாடகி சுசித்ரா, மாதம்பட்டி ரங்கராஜ் ஷபானாவிற்கு தவறாக மெசஜ் செய்ததாக ஒரு நேர்காணலில் பேசியிருக்கும் விடயம் தற்போது இணையத்தில் புதிய புயலையே கிளப்பி வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை.
இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
அண்மை காலமாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்லடாவை இரண்டாம் திருமணம் செய்த சர்ச்சையால் இவரின் பெயர் இணையத்தில் அதிகம் அடிப்படுகின்றது.
ஷாபானாவுடன் பிரச்சினையா?
தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற வரும் இவர், முக்கிய போட்டியாளராக இருக்கும் நடிகை ஷாபானாவிடம் வம்பு செய்வதாக அண்மையில் பாடகி சுசித்ரா கொடுத்திருக்கும் ஒரு நேர்காணல் இணையத்தில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது
இந்த சீசனில் அனைவருக்கும் பிடித்த ஒரு பெண்ணாக ஷபானா இருக்கிறார். ஆனால் அவரை காயப்படுத்தும் விதமாக ரங்கராஜ் நடந்து கொண்டார் என தெரிகிறது.
குரேஷியும் மாதம்பாட்டியுடன் மிக நெருக்கமான பழகுகிறார். இன்ஸ்டாவில் ஜாய் பிரிசில்லாவை கிண்டல் செய்து ரீலிஸ் வெளியிட்டது அதை உறுதி செய்கிறது. மேலும் ஷூட்டிங் சமயத்திலும் ரங்கராஜிடம் உரிமை எடுத்து பழகுகிறார் குரேஷி.
சமீபத்தில் பாடகி சுசித்ரா, மாதம்பட்டி ரங்கராஜ் ஷபானாவிற்கு தவறாக மெசஜ் செய்ததாக ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அதில், குரேஷியும் மாதம்பட்டி ரங்கராஜும் சேர்ந்து கொண்டு ஷபானாவிற்கு ஒரே நேரத்தில் தவறாக குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் கூறியிருக்கிறார்.
கடந்த வார குக்கு வித் கோமாளி நிகழ்சியில் ஷபானா நடந்துக்கொண்டதை பார்க்கும் போது இதில் உண்மை இருப்பது போல் தோன்றினாலும் இதை நிரூபிக்கும் வகையில் ஷபானா எந்த பதிவையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |