காடு மாதிரி முடி வளரணுமா? கறிவேப்பிலை ரசம் சாப்பிடுங்க
கறிவேப்பிலையில் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கின்றன.
கறிவேப்பிலையைக் கொண்டு பல்வேறு ரெசிபிக்களை செய்யலாம்.
சரி இனி, கறிவேப்பிலை ரசம் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - 1 கப்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 3 தேக்கரண்டி
நெய் - சிறிதளவு
கடுகு - தேவையான அளவு
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
புளி - சிறிய உருண்டை
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் கறிவேப்பிலை, சீரகம், மிளகு, துவரம்பருப்பு என்பவற்றை விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
புளியை இரண்டு கப் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். பின்னர் அதில் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட வேண்டும்.
பின்னர் அரைத்த விழுது,தேவையான அளவு உப்பு என்பவற்றைச் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
பின்னர் நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும். கறிவேப்பிலை ரசம் நொடியில் ரெடி.