முடி வளர்ச்சியை மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கறிவேப்பிலை குழம்பு - ஊரே மனக்கும் சுவையில் ருசியுங்கள்
கறிவேப்பிலையைக் கொண்டு குழம்பு செய்து ருசிக்கலாம்.
இந்த கறிவேப்பிலை குழம்பு மிகவும் ஆரோக்கியமானது.
குறிப்பாக தலைமுடி பிரச்சனையை சந்திப்பவர்களுக்கு இந்த குழம்பு மிகவும் நல்லது.
கறிவேப்பிலை குழம்பு சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
- புளி - 1 டேபிள் ஸ்பூன்
- மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 1/4 கப்
- நாட்டுச் சர்க்கரை - 1 டீஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
- உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
- நல்லெண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
- கறிவேப்பிலை - 1 கப்
- பூண்டு - 4
- இஞ்சி - 1/4 இன்ச் துண்டு
- வரமிளகாய் - 3
- பச்சை மிளகாய் - 1
- புளி - 1 சிறிய துண்டு
- துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் கறிவேப்பிலையை நன்கு கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து 3 நிமிடம் வறுத்து, பின் புளி மற்றும் தேங்காயை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
அதன் பின் கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு, சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் புளியை நீரில் ஊற வைத்து, பிழிந்து சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை மசாலா பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, எண்ணெய் தனியாக பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.
பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
குழம்பு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, தேவயைன அளவு நீரை ஊற்றி, குறைவான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
குழம்பின் நிறம் சற்று மாறி, எண்ணெய் மேலே பிரிய ஆரம்பிக்கும் போது, அதில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து கிளறி இறக்கினால், கறிவேப்பிலை குழம்பு தயார்.
முடி வளர்ச்சியை மின்னல் வேகத்தில் தூண்டும் சக்தி கறிவேப்பில்லைக்கு உண்டு. எனவே அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.