வாரத்திற்கு இரு தடவை கூந்தலுக்கு தயிர் தடவினால் நடக்கும் மாற்றம் என்ன?
தற்போது பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி கூந்தல் பிரச்சனை என்பது கூடுதலாக உள்ளது. முடி உதிர்வு வறட்சி இளநரை பொடுகுத்தொல்லை போன்ற பல பிரச்சனைகள் வருகின்றது.
மூளை வளர்ச்சி முதல் தோல் பிரச்சனை வரை தீர்வு கொடுக்கும் வைட்டமின் பி6: எந்த பழங்களில் அதிகம்னு தெரியுமா?
இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இன்றைய அவசர கால மனிதர்கள் அதிக அளவிலான கெமிக்கல்களை பயன்படுத்துகின்றனர். இதனால் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படுகின்றது.
ஆனால் எந்த விதமான ஆரோக்கிய பிரச்சனையும் இல்லாமல் எப்படி கூந்தலை பராமரிக்கலாம் என்பதை இந்த பதவில் முழுமையாக பார்க்கலாம். தயிரை கூந்தலுக்கு தடவுவதன் மூலம் கூந்தலுக்கு என்ன நன்மை கிடைக்கின்றது எனபதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தயிர்
பலரும் நீண்ட கருப்பான பளபளப்பான கூந்தலுக்காக பலவாறு முயற்சிப்பார்கள். இதற்காக செலவு செய்யாமல் பல வழிகளை செய்யலாம் அதில் தயிரும் ஒன்று. இது சமயலறை பொருளாக இருந்தாலும் இது அழக்குக்காகவும் பயன்படுத்தலாம்.
தயிரில் உள்ள புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முடியை பலப்படுத்தி, அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும், முடியில் பொடுகு போன்ற பிரச்சனை இருந்தால், அதை போக்கவும் உதவுகிறது.
ஒரு வாரத்திற்கு இரண்டு தடவை முடிக்கு தயிரை பூசுவதால் முடி உதிர்வு நிற்கிறது இதை செய்வது இதில் உள்ள புரதம் தான். உச்சந்தலையில் வீக்கம் பூஞ்சை பிரச்சனை இருப்பவர்கள் தயிரை தடவினால் அது மிகுந்த நன்மை தருகிறது ஒரு வாரத்தில் இந்த பிரச்சனைக்கு நிவாரணம் கிடைக்கிறது.
முடியை மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற்றக்கூடிய பதார்த்தமான லாக்டிக் அமிலம் உதவுகிறது. தயிரில் உள்ள வைட்டமின் பி முடியை வேகமாக வளரச் செய்கிறது. இதனால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
பொடுகு உள்ளவர்கள் தயிரை பயன்படுத்த வேண்டும். தயிரில் பொடுகு எதிர்ப்பு தன்மை நிறைய உள்ளது. தலைமுடிக்கு தயிர் தடவ முன் நல்ல ஒரு ஷாம்பூவால் கழுவி உலர வைக்க வேண்டும்.
இதன் பின்னர் தயிரை தடவி 30 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவினால் கூந்தல் நன்கு மிருதுவாக இருக்கும். இதை தவிர தயிரில் கற்றாழை ஜெல் கலந்து பூசினாலும் நன்மை இரட்டிப்பாக கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |