உடல் எடையைக் குறைக்க அதிக சிரமமா? சீரக தண்ணீர் செய்யும் அற்புதம்
பல மருத்துவ குணங்கள் கொண்ட சீரகத்தை, சீர் + அகம் என பிரிப்பார்கள். இவ்வாறு பிரிப்பதற்கு காரணம் என்னவெனில், நமது உடலை எப்பொழுதும் சீர் செய்யும் பண்ணும் சீரத்திற்கு உண்டு.
சீரகத்தின் நன்மைகள்
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சீரகத்தை வேகவைத்து அதன் தண்ணீரை தொடர்ந்து குடித்துவந்தால், தேவையற்ற கொழுப்புக்கள் கரைவதுடன், உடல் எடையும் குறையுமாம்.
நாம் உண்ணும் உணவுகள் செரிமானம் ஆவதற்கு உதவியாக இருக்கும் என்சைம்களை சீரகத்தண்ணீர் தூண்டிவிடுவதுடன், செரிமானப் பிரச்சினையும் நீங்கும்.
சித்த மருத்துவத்தில் பித்த நாசினி என்று அழைக்கப்படும் சீரகத்தால் பித்தத்தினை சரிசெய்யலாம்.
ஒற்றைத் தலைவலி, வாந்தி போன்றவற்றுக்கு, 200 கிராம் சீரகத்தில் ஒரு எலுமிச்சை சாற்றை பிழிந்து நன்றாக காய வைத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனை தினமும் அரை தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் மேலே கூறப்பட்டுள்ள நோய்களுக்கு தீர்வு காணலாம்.
மேலும் சீரகத்தினை வறுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து தண்ணீரை குடித்தால் உயர் ரத்த அழுத்தம் குறைவதுடன், இருமல், சளி இவைகளும் நீங்கும்.