கோடைக்கு ஏற்ற குளு குளு வெள்ளரிக்காய் மோர்...
தற்போது வெயிலின் உஷ்ணத்தால் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகமான வெயில் உடலிலுள்ள நீர்ச்சத்தை அப்படியே உறிஞ்சி எடுத்துவிடுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் வெள்ளரிக்காய் மற்றும் மோர் என்பவை உடல் சூட்டை தணிப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும்.
இனி வெள்ளரிக்காய் மோர் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் - 2
மோர் - தேவையான அளவு
ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு
புதினா - சிறிதளவு
மிளகு - 1/2 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
செய்முறை
முதலாவதாக வெள்ளரிக்காயை தோல் சீவி துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கிய வெள்ளரிக்காய், மோர், புதினா, உப்பு, மிளகு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்தவற்றை ஜூஸ் வடிகட்டியில் ஊற்றி டம்ளரில் ஊற்றிக் கொள்ளவும்.
சூப்பரான வெள்ளரிக்காய் மோர் தயார்.