Tea Kadai Sweet Bonda : டீக்கடை ஸ்டைல் இனிப்பு போண்டா – வீட்டிலேயே செய்வது எப்படி?
Tea Kadai Sweet Bonda : மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது வீட்டில் உள்ளவர்கள் ஏதாவது ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா?அப்படியானால், ஒருமுறை இந்த டீக்கடை ஸ்டைல் இனிப்பு போண்டா செய்து பாருங்கள்.
செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். டீ கடை இனிப்பு போண்டா செய்முறையை எளிய படிமுறைகளாக இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பால் - 300 ml
பால் பவுடர் - 1/ 4கப்
சர்க்கரை - 100 கிராம்
மைதா – 200 கிராம்
ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்
நெய்- 2 தே.கரண்டி
உப்பு – 1 சிட்டிகை
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பால் மற்றும் பால் பவுடர் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும் பால் கெட்டியாக ஆரம்பித்ததும் அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு அதை இறக்கி ஆறவிட வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ஏலக்காய் தூள், நெய் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பாலை சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.

மாவு மிகவும் தளர்வாக இல்லாமல், கையில் எடுத்துப் போண்டா போடும் அளவுக்கு இருக்க வேண்டும். அதன் பிறகு ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.
கையில் சிறிது எண்ணெய் தடவி, மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சூடான எண்ணெயில் போடவும்.
போண்டாக்களை மிதமான தீயில் திருப்பித் திருப்பி பொன்னிறமாகவும், நன்றாக வெந்து மொறுமொறுப்பாகவும் வரும் வரை பொரித்தெடுத்தால் அவ்வளவு தான்சுவையான டீக்கடை இனிப்பு போண்டா தயார்.
சூடான காபி அல்லது டீயுடன் இந்த இனிப்பு போண்டாவை பரிமாறினால், மாலை நேர ஸ்நாக்ஸ் இன்னும் சிறப்பாக இருக்கும். ஒருமுறை செய்து பாருங்கள் வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் மீண்டும் செய்து தரச் சொல்வார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |