27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா?
தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கடந்த சில காலமாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதன் தொடர்ச்சியாக, கணவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததார்.
இந்த மனு தொடர்பான விசாரணையின்போது, இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, வழக்கு முதலில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால், அந்த நாளில் விஜய்யும் சங்கீதாவும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், வழக்கு மீண்டும் ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் 15ஆம் தேதியும் இருவரும் ஆஜராகாத நிலையில், வழக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இதனிடையே, நேற்று மதியம் 12.20 மணியளவில் இந்த விவாகரத்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த முறை சங்கீதா முதல்முறையாக வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரானதாக கூறப்படுகிறது.

விசாரணையின்போது சுமார் 20 நிமிடங்கள் தனது தரப்பு வாதங்களை அவர் முன்வைத்தார். பின்னர், முக்கிய திருப்பமாக, தான் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.
இதையடுத்து, விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா தாக்கல் செய்திருந்த மனு திரும்பப் பெறப்பட்ட நிலையில், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்ததாக தகவல் வெளியானது.
விஜய்யுடன் மீண்டும் இணைவாரா?
விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையே சங்கீதா தற்போது வாபஸ் பெற்றிருப்பது, விஜய்–சங்கீதா குடும்ப வாழ்க்கை குறித்த பல்வேறு கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
குறிப்பாக, இருவரும் மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளார்களா? அல்லது விவாகரத்து வழக்கை மட்டுமே வாபஸ் பெற்றுவிட்டு, தொடர்ந்து தனித்தனியாக வாழ்கிறார்களா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

மகன் ஜேசன் பேட்டி ஏற்படுத்திய எதிர்பார்ப்பு இதற்கிடையே, அண்மையில் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் விஜய் மற்றும் சங்கீதா குறித்து அவர்களது மகன் ஜேசன் நல்லவிதமாக பேசியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது சங்கீதா விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றிருப்பது, குடும்பத்தில் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் தொடர்பாக புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு புறம், சங்கீதா தற்போது லண்டனில் வசித்து வருவதாக கூறப்படும் நிலையில், அவர் மீண்டும் சென்னைக்கு திரும்புவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, குடும்பத்தைக் கவனிக்காதவர் என்ற ரீதியில் முன்வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்களுக்கு சஞ்சயின் பேச்சும், இப்போது சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைத் திரும்பப் பெற்ற முடிவும் முற்றுப்புள்ளி வைத்துள்ளன.
எனினும், சங்கீதாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அவரது தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 25 அன்று விஜய் - சங்கீதா தம்பதியரின் 27-வது திருமண நாள் வரவுள்ள நிலையில், அவர்கள் மீண்டும் இணைந்து சுமுகமாக வாழ வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |