குழந்தைகளுக்கு பிடித்த இறால் கட்லெட்... மொறுமொறு சுவையில் செய்வது எப்படி?
குழந்தைகளுக்கு பிடித்த இறால் கட்லெட் மொறுமொறு சுவையில் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக குழந்தைகள் பள்ளிக்கு சென்று வீடு திரும்பினால் வீட்டில் ஏதாவது ஸ்நாக்ஸ் வைத்திருக்க எதிர்பார்ப்பார்கள். அதிலும் அசைவமாக இருந்தால் செம்ம குஷியாகிவிடுவார்கள்.
இந்நிலையில் குழந்தைகளுக்கு பிடித்தமான இறால் கட்லெட் செய்வது குறித்து இந்த பதிவில் தெரிந்த கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
இறால்-½கிலோ
இஞ்சி - ஒரு துண்டு
பெரிய வெங்காயம்-3
பூண்டு-12 பல்
காய்ந்த மிளகாய் -6
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
முட்டை-2
ரொட்டித்தூள்-ஒரு கோப்பை
கொத்தமல்லித்தழை, எண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை
இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி இலை இவற்றினை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
வேக வைத்த இறாலை அரைத்த மசாலா விழுதுடன் சேர்க்கவும். பின்பு இதற்கு தேவையான அளவு உப்பு மற்றும் மல்லித்தூள் இவற்றினை சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.

பின்பு உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் கட்லெட்டை செய்து வைத்துக் கொள்ளவும். முட்டையை பவுல் ஒன்றில் நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும். ரொட்டித்தூளையும் தயார் நிலையில் வைக்கவும்.
கட்லெட்டை முட்டையில் முக்கி பின்பு ரொட்டி தூளில் பிரட்டி பின்பு எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான இறால் கட்லெட் தயார்.
இதனை தேங்காய் சட்னி, புதினா சட்னி, தக்காளி சாஸுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை மேலும் அதிகரிக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |