வெங்காய வடை மொறுமொறுன்னு இருக்கணுமா? இந்த பொருளை சேர்த்து செய்ங்க
மாலை நேரத்தில் தேனீருடன் சாப்பிட மொறுமொறுப்பாக ஏதாவது ஸ்நாக்ஸ் செய்ய வேண்டுமா?
அப்படியானால் வெங்காயத்தைக் கொண்டு சட்டுன்னு இந்த வெங்காய வடையை செய்து சாப்பிடுங்க.
சாரதரணமான முறையில் செய்வதை விட முட்டை கலந்து வெங்காய வடை செய்தால் மிகவும் சுவையாகவும் மொறுமொறுப்பாகவும் இருக்கும். எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 4
முட்டை - 1
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - 1 கையளவு (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
மல்லித் தூள் - 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
மிளகு தூள் - 1/4 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
கரம் மசாலா - 1/2 தே.கரண்டி
கடலை மாவு - 1 கப்
எண்ணெய் - 1 தே.கரண்டி
தண்ணீர் - சிறிது
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயத்தை சுத்தம் செய்து நீளவாக்கில் சிறுதுண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வெங்காயத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, கைகளால் நன்கு பிசைந்து, வெங்காயத்தை உதிர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் ஒரு முட்டையையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை ஆகியற்றை சேர்க்க வேண்டும்.
பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா மற்றும் தெவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
பின்னர் அதில் கடலை மாவு மற்றும் 1தே.கரண்டி எண்ணெய் ஊற்றி கைகளால் நன்கு பிசைந்தக்கொள்ள வேண்டும்.
பின்னர் லேசாக நீரை தெளித்து, வடை பதத்திற்கு மாவை நன்றாக பிசைந்ர்க்கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த வடை கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், உருட்டி வைத்துள்ள வடைகளை பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான சுவை நிறைந்த வெங்காய வடை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |