புதையல் ஆசையில் நண்பரையே நரபலி கொடுத்த அவலம்! பரப்பரப்பில் பொதுமக்கள்
தமிழகத்தில் புதையலை எடுப்பதற்காக விவசாயி ஒருவரை நரபலி கொடுத்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெறும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோர சம்பவம்
தமிழகம் - கிருஷ்ணகிரி மாவட்டம், புதூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் என்பவர் கடந்த 28ஆம் திகதி அப்பகுதியலுள்ள வெற்றிலை தோட்டத்தில் 1½ அடி ஆழ குழியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதன்படி இவர் இறந்துக் கிடந்த குழியின் முன் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்கள், அறுத்த கோழி மற்றும் மண்வெட்டி போன்ற பொருட்கள் கிடந்ததுள்ளது.
இது தொடர்பில் போலீஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு, லட்சுமணன் மரணம் தொடர்பிலான விசாரணையில் உயிரிழந்தவரின் நண்பர் மணி தான் கொலையாளி என தெரியவந்தது.
நரபலி

விசாரணையில், லட்சுமணனும் அவரது நண்பரும் இணைந்து ஒரு புதையலொன்றை எடுப்பதற்கு முடிவு செய்துள்ளனர்.
சம்பவத் தினத்தன்று புதையலை எடுப்பதற்கு குறிப்பிட்ட இடத்திற்கு சென்றோம், சென்று பார்த்த போது நாங்கள் நரப்பலி கொடுப்பதற்கு முடிவு செய்த பெண்மணி வரவில்லை.
இதனால் கோவமடைந்த லட்சுமணன் என்னை கொன்று புதையலை அடைய எண்ணி, எனது கழுத்தை கடிக்க தொடங்கினான். அதனால் எனது தற்காப்புக்காக அவனை கொலை செய்ததாக மணி தெரிவித்துள்ளார்.
மேலும் கொலைக்கு பின் புதையல் கிடைக்கும் என நம்பினேன், ஆனால் புதையலும் கிடைக்கவில்லையென தெரிவித்துள்ளார்.