சளியை முறிக்கும் நண்டு சூப்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பொதுவாகவே காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு நண்டு சூப் மிகச்சிறந்த தீர்வு கொடுக்கும்.
கிராம புறங்களில் கை வைத்தியமாக வயல் வெளியில் கிடைக்கும் நண்டுகளை வைத்து சூப் செய்து சாப்பிடுவது வழக்கம். இப்படி மருத்துவ குணம் நிறைந்த நண்டு சூப்பை எவ்வாறு வீட்டிலேயே அட்டகாசமான சுவையில் எளிமையாக தயார் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
நண்டு
தக்காளி
பெரிய வெங்காயம்
இஞ்சி
மிளகு
சீரகம்
எண்ணெய்
பூண்டு
பச்சைமிளகாய்
பட்டை
பிரியாணி இலை
கொத்தமல்லி இலை
உப்பு
செய்முறை
முதலில் நண்டை சுத்தம் செய்து நண்டின் சதைப்பகுதி வெளியில் வருமாறு தட்டிக் சமைப்பதற்கு ஏற்ற வகையில் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இஞ்சி மற்றும் பூண்டையும் நன்றாக தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பட்டை, பிரியாணி இலை, வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் அரிசி கழுவிய தண்ணீர் அல்லது சாதாரண தண்ணீரை தேவையான அளவு அளவு ஊற்றிக்கொள்ள வேண்டும்.
தண்ணீர் நன்றாக கொதித்ததும் நண்டு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நண்டு நன்றாக வெந்ததன் பின்னர் இப்பொழுது மிளகு, சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நண்டு ஓடு அடியில் இருக்கும் என்பதால் நன்றாக வடிகட்டி விட்டு கொத்தமல்லி இலை தூவினால் அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் நண்டு சூப் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |