ஏறிய கொலஸ்ரோலை மின்னல் வேகத்தில் இறக்கும் நண்டுகால் ரசம்!
பொதுவாக வீடுகளில் ஞாயிற்றுகிழமைகளில் சமையல் வாசனை அமோகமாக இருக்கும்.
நாம் ஞாயிற்றுகிழமைகள் என்றால் சிக்கன், மட்டன், மீன் என சாப்பிட்டிருப்போம் இந்த வாரம் நண்டு குழம்பு சாப்பிடுவோம்.
நண்டை வைத்து குழம்பு சாப்பிடுவதை விட அதை வைத்து நண்டுக் கால் ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் கூடும்.
மேலும் கடலில் இருக்கும் நண்டுகளில் கனிமச்சத்துக்கள் அதிகமாக இருக்கும். அதுவும் மனித உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் குறைவாக தான் இருக்கின்றது.
அந்த வகையில் நண்டுகால் ரசம் எப்படி செய்வது என தெளிவாக தெரிந்து கொள்வோம்.
ரசம் செய்ய தேவையான பொருள்கள்
- கடல் நண்டின் கால்கள் மட்டும் - 15
- சீரகம் - 1 தேக்கரண்டி
- சோம்பு - 1 தேக்கரண்டி
- மிளகு - 2 தேக்கரண்டி
- முழுப் பூண்டு - 1
- சாம்பார் வெங்காயம் - 50 கிராம்
- காய்ந்த மிளகாய் - 4
- தக்காளி - 2
- புளி - நெல்லிக்காய் அளவு
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- தேங்காய்ப் பால்- 50 மில்லி
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
- கடலை எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - 1 தேக்கரண்டி
- உளுந்து - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - ஒரு கைபிடி
ரசம் எப்படி செய்யணும் தெரியுமா?
ரசத்திற்கு தேவையான நண்டுகளை எடுத்து இதில் கடிக்கும் பகுதியை கணு வரை வெட்டி விட்டு இரண்டாக வெட்டி அகற்றி நன்றாக உப்பு , மஞ்சள் போட்டு கழுவ வேண்டும்.
பின்னர் சீரகம், சோம்பு இரண்டையும் எடுத்து நீர் விட்டு மைப்போல் அரைத்து கொள்ளவும். மிளகு, பூண்டு தட்டி அதனுடன் வைத்து கொள்ளவும்.
சோம்பு கலவையுடன் புளியை கொட்டி இரண்டையும் நன்றாக கலந்து விட்டு கொள்ளவும். அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியையும் கலந்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் காய்ந்த பின்னர் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்,வெங்காயம், தக்காளி ஆகிய பொருட்களை போட்டு தாளிக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கி பின்னர் புளி கரைச்சலை ஊற்றி கொதிக்க விட வேண்டும். 2 -3 நிமிடங்களுக்கு பின்னர் நண்ட கால்களை சேர்ககவும்.
கால்கள் வெந்ததும் சிவந்த நிறமாகும் சமயத்தில் தேங்காய்ப் பால் ஊற்றிக் கிண்டி, இறக்கினால் சுவையான நண்டுக்கால் ரசம் தயார்.!