கொரோனாவை விரட்டி அடிக்கும் மாட்டு சிறுநீர்? எப்படி அருந்த வேண்டும்? வைரலாகும் பிரபலத்தின் வீடியோ
இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் நாளுக்கு நாள் பலியாகும் உயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் பலியாகும் உயிர்களின் எண்ணிக்கை தினந்தோறும் 4 ஆயிரத்தை தாண்டிவருகிறது.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர், மாட்டு சிறுநீர் அருந்தினால் கொரோனா உட்பட அனைத்து வைரஸ்களையும் நம் உடலில் இருந்து விரட்டி விடலாம் என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Bairia தொகுதி எம்எம்ஏ-யான Surendra Singh, தினமும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கியதும் மாட்டு சிறுநீரை அருந்துவதாக தெரிவிக்கிறார்.
கொரோனா மட்டுமல்லாமல், இதய நோய்கள் வராமலும் மாட்டு சிறுநீர் காப்பாற்றும் எனவும் தெரிவிக்கிறார்.
டுவிட்டர் மட்டுமின்றி அனைத்து சமூகவலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாக, நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
BJP Baliya MLA surendra singh is advising people to have Gaumutra (Cow Urine ) for Corona treatment #coronavirus @RoflGandhi_ https://t.co/4TpraQwuTZ pic.twitter.com/9blJVe8bgx
— Rofl Crazy 🏹🚜 (@crazy143143) May 8, 2021