Miss World 2021: திடீரென உலக அழகி இறுதிப்போட்டி தள்ளிவைப்பு... அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்;
2021-ம் ஆண்டுக்கான உலக அழகிப்போட்டி கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 2021-க்கான அழகிப்போட்டி போர்டோரிகோ நாட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால், பல்வேறு நாட்டு அழகிகள் கலந்துகொள்ள இந்திய நாட்டில் மானசா வாரணாசி பங்கேற்று இருக்கிறார். இதனிடையே, உலக அழகிப்போட்டி தள்ளி வைக்கப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் திடீரென்று அறிவித்தனர்.
போட்டியில் பங்கேற்றுள்ள அழகிகளில் 17 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி படுத்தப்பட்டது. இதில் இந்திய அழகி மானசா வாரணாசிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதைப்பற்றி, உலக அழகிப்போட்டி அமைப்பாளர் தெரிவிக்கையில், 2021-ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் சிலருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கிறது.
இதனால், இறுதிப் போட்டி அடுத்த 90நாட்களில் போர் டோரிகோவில் நடைபெறும். போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலனுக்காக கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்து இருக்கிறார்.