என்னா அடி.... கொரோனா வேக்சின் நம் உடலில் எப்படி வேலை செய்கிறது.? மில்லியன் பேரை சிரிக்க வைத்த வடிவேலு வெர்ஷன்
தடுப்பூசி போட்டுக் கொண்டால் அது எப்படி கொரோனா வைரஸுடன் போராடுகிறது என்பதை மீம்ஸ் கிரியேட்டர்கள் வடிவேலுவை வைத்து அழகாக காட்டியிருக்கும் வீடியோ பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்த வீடியோவை பார்த்தால் வடிவேலுவே இம்பிரஸ் ஆகிவிடுவார். அந்த அளவுக்கு அம்சமாக இருக்கிறது.
அவர் பலர் கையால் அடி வாங்கிய காட்சிகள் தடுப்பூசி வீடியோவுக்கு உதவியிருக்கிறது. முன்னதாக கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வடிவேலு பேசியதாவது, இறைவன் கொரோனா அப்படிங்கிற படத்தை ரிலீஸ் பண்ணியிருக்கிறான்.
கொரோனா வேக்சின் நம் உடலில் எப்படி வேலை செய்கிறது.?
— டேனியப்பா (@minimeens) June 1, 2021
-வடிவேலு வெர்ஷன்
??? pic.twitter.com/Xk40TLrpI0
இந்த படத்தை எல்லோரும் வீட்டில் இருந்தபடியே பாருங்கனு சொல்றான். ஜன்னல் வழியாகவே பார், கூட்டமே இருக்காது. நாம ஒரு படத்தை ரிலீஸ் செய்தால் மக்கள் தான் தூக்குவார்கள்
. ஆனால் இன்று அந்த படத்தை அவன் எப்ப தூக்குவான் என்றே தெரியவில்லை. அவன் தூக்குனாத் தான் நாம் எல்லாம் வெளியே வர முடியும். சும்மா உட்காருவது எவ்வளவு பெரிய சிரமம் தெரியுமாடானு ஒரு படத்தில் நடிச்சிருக்கிறேன். சும்மா உட்கார்ந்து பாருடா, சேலஞ்சுடா என்று சொல்வேன்.
அது வெறும் படமாத் தான் பண்ணினேன். ஆனால் நிஜத்தில் அனைவரும் சும்மா உட்கார்ந்தால் எப்படி இருக்கும் என்பதை உணர வைத்துவிட்டான்.
பயந்துவிடாதீர்கள். இந்த கொரோனாவை நிச்சயமாக நாம் விரட்டுவோம். இறைவனை வணங்கி, அரசு சொல்வதை கேட்டு வீட்டை விட்டு வெளியே வராமல், தொட்டுப் பேசாமல், கட்டிப்பிடிச்சுடாதீங்க. இஞ்சி, எலுமிச்சை, புதினாவை வைத்து டீ போட்டு குடிங்க.
இல்லை என்றால் இஞ்சி, எலுமிச்சை, வேப்பிலை, துளசியை நீரில் போட்டு ஆவி பிடித்தால் கொரோனாலாம் எங்கிட்டு போகும்னு தெரியாது. இதை நான் சொல்லவில்லை, பெரியவர்கள் சொல்கிறார்கள் என்றார்.