எச்சரிக்கை ரிபோர்ட்! விந்தணுக்களை பாதிக்கும் Corona வைரஸ்? ஆண்களே உஷார்
கொரோனா வைரஸானது ஆண்களின் விந்தணுக்களையும் பாதிக்கலாம் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஆய்வின் தலைவர் பேராசிரியர் லி யுஃபெங் கூறுகையில்,
புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கும் நுரையீரல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த வைரஸை சோதனை செய்ததில் ஆண்களின் விந்தணுக்களையும் தாக்கும் ஆற்றல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுட்டிகாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஊஹான் நகரத்தில் உள்ள டோங்ஜி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறியதாவது,
பாதிக்கப்பட்ட நபர்கள் குணமடைந்து வீடு திரும்பிய பின்பே அவர்களுடைய விந்தணுக்களை பரிசோதனை செய்து உறுதியாகச் சொல்லமுடியும். அதுவரை சந்தேகத்தின் அடிப்படையிலேயே சிகிச்சை அளிக்கப்படும். கொரோனா வைரஸ், புரோட்டின் மற்றும் ஏசிஇ 2 என அழைக்கப்படும் நொதி (enzyme) ஆகியவற்றின் மூலம் செல்களை ஆக்கிரமிக்கிறது.
பின்பு அவை நுரையீரல், சிறுநீரகப்பை, இதயம், தைராய்டு என மற்ற உள்உறுப்புகளை பாதிக்கின்றன. அந்தவகையில் ஏசிஇ 2 நொதியானது ஆண்களின் விந்தணுக்களை பாதிக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் ஆண்களின் விந்தணு உற்பத்தி, அதன் எண்ணிக்கையில் பாதிப்பை உண்டாக்கலாம். அவர்களுடைய பாலின உணர்ச்சியை பாதிக்கலாம்.
மொத்தத்தில் ஆண்களின் பாலின வாழ்க்கைத் தரம் குறையலாம். இப்படி எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் அவை பாதிக்கப்பட்ட ஆண்கள் குணமடைந்த பின்னரே உறுதியாகச் சொல்ல முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
Omicron தொற்றின் புதிய அறிகுறிகள் - ஆய்வில் வெளிவந்த உண்மைகள்
ஒமைக்ரானுக்கு பல அறிகுறிகள் இருந்தாலும் ஒரே ஒரு பொதுவான அறிகுறி இருப்பதை ஆராச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அது தான் தொண்டை வலி.
கடந்த டிசம்பர் 3 முதல் 10ம் தேதி வரை பிரிட்டனில் ஒமைக்ரான் பாதித்தோரிடையே நடத்தப்பட்ட ஆய்வில், தலைவலி, சோர்வு, 'முக்கியமாக' குளிர் போன்ற அறிகுறிகள் பிரதானமாக இருப்பதாக தெரியவந்திருக்கிறது.
ZOE Symptom Tracking எனப்படும் ஒமைக்ரான் அறிகுறி குறித்த ஆய்வு அறிக்கையில் மூக்கு ஒழுகுதல், தலைவலி, சோர்வு (லேசான அல்லது கடுமையானது), தும்மல் மற்றும் தொண்டை புண் அல்லது வலி ஆகியவை தான் ஒமைக்ரானின் அறிகுறிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்டா - ஒமைக்ரான் - அறிகுறிகள் பொதுவானதா?
டெல்டாவுக்கும், ஒமைக்ரான் தொற்றுக்குமான அறிகுறிகள் ஒவ்வொன்றுக்கும் இடையே மாறுதல்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டெல்டா பாதிப்பில் வாசனை, சுவை தெரியாமல் போவது, காய்ச்சல், தொடர்ச்சியான இருமல், சோர்வு போன்றவை அறிகுறிகளாக இருக்கிறது.
சிலருக்கு குடல் பிரச்சினைகளும் கண்டறியப்பட்டுள்ளன.எனவே, மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.