மக்காச்சோளம் ஏன் சாப்பிட வேண்டும்? நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
மக்காச்சோளம் ஒரு ஆரோக்கியமான தானியமாகும். இதை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுடன், பெரும்பாலான நபர்கள் பாப்கான், ஸ்வீட் கான் இது போன்று செய்து சாப்பிடுகின்றனர்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மக்காச்சோளத்தில், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் நல்ல மூலமாகும். இதன் நன்மைகளைக் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
மக்காச்சோளம் ஏன் சாப்பிட வேண்டும்?
சோளம் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாக இருப்பதால் இது செரிமானத்திற்கு சிறந்ததாக இருக்கின்றது. மலச்சிக்கல் வயிறு தொடர்பான பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கின்றது.
மக்காச்சோளத்தில் இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்தும் உள்ளதால், இவை கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும்.
இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்கள் சேதம் அடையாமல் பாதுகாக்கின்றது. மேலும், இதில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.
மக்களாச்சோளத்தில் லூடீன் மற்றும் ஜீயாக்சாண்ட உள்ளது. இவை இரண்டும் கண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கின்றது.
மேலும் ரத்த ஓட்டத்தில் சர்க்கரையை உறிஞ்சுவதை குறைக்கின்றது. இதன் காரணமாக சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை சுலபமாக கட்டுப்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |