சக்கரை நோயாளர்களின் வரப்பிரசாதம் சோளம்! நீங்கள் அறியா மருத்துவ குணங்கள்
இயற்கையாக கிடைக்கக்கூடிய உணவு வகைகளில் ஒன்றான சோளம் சக்கரை நோயை குணப்படுகிறது என்று கூறினால் நம்ப முடிகிறதா?
ஆம், இதில் புரதம், கொழுப்பு, மாவுசத்து, இரும்புசத்து, கால்சியம், தயாமின், நயாசின், தாது உப்புகள் மற்றும் நார்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது.
சோளத்தின் மருத்துவ குணங்கள்
செரிமான பிரச்சினை, மலச்சிக்கல் பிரச்சினையுள்ளவர்கள் தினமும் மாலையில் சோளம் எடுத்துக் கொள்வது சிறந்தது.
ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் வயிற்று புற்றுநோய் உள்ளவர்களும் இது நிவாரணம் அளிக்கிறது.
சோளத்தில் வைட்டமின் பி சத்து அதிகம் இருக்கிறது, இது நரம்பு மண்டலங்களை சீர்படுத்தி ஞாபக சக்தியை அதிகப்படுத்த உதவுகிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு போலிக் அமிலம் குறைவாக இருக்கும் போது, பிறக்கும் குழந்தைகளும் குறைந்த எடையில் பிறக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளன. இது போன்ற பிரச்சினைகளை சோளம் நிவர்த்தி செய்கிறது.
பொதுவாக உடல் எடை குறைவாக இருப்பவர்கள் சோளம் தினமும் சோளம் எடுத்துக் கொள்வது சிறந்தது. ஏனெனின் 100 கிராம் சோளத்தில் 365 கலோரிச் சத்துக்கள் இருக்கிறது.
சோளத்தில் இருக்கும் ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் உடலிருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் கரைத்து ரத்த நாளங்கள் நரம்புகள் மற்றும் இதயத்திற்கு செல்லும் நரம்புகள் போன்றவற்றின் இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது.
இது முகத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கிறது. அதாவது சோளத்திலிருந்து பெறப்படும் மாவை பால் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகத்திலுள்ள தேவையற்ற அழுக்குகள் மற்றும் தழும்புகள் என்பவற்றை அகற்றி முகத்தை ஜொலிக்க வைக்கிறது.
மேலும் சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகள் போன்றவற்றை குணமாக்க உதவுகிறது.