செப்பு டம்பளரில் நீர் குடிக்கும் பழக்கம் கொண்டவரா நீங்க! அப்போ இந்த நோய் உங்களை துளியும் நெருங்காது
பொதுவாக நாம் வீடுகளில் பரம்பரை வழியாக வந்த பல பாத்திரங்களை பயன்படுத்துவோம்.
ஆனால் தற்போது இருக்கும் தலைமுறைகள் இந்த பாத்திரங்களை தவிர்த்து பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பாத்திரங்களை அழகிற்காக பயன்படுத்துவார்கள்.
இந்த பழக்கம் உடலில் புற்றுநோய் வரை சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில் பித்தளை, செப்பு, வெள்ளி, வெங்களம், தங்கம் இவ்வாறான பாத்திரங்களை பயன்படுத்தினால் அதன் பக்கவிளைவு குறைவாக இருக்கும்.
இதன்படி, செப்பு பாத்திரத்தை பயன்படுத்தி சமைத்தல், சாப்பிடுதல் போன்ற வேலைகள் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
செப்பு கோப்பை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
1. முதலில் செப்பில் என்ன இருக்கு என்பதனை தெரிந்து கொள்ளவேண்டும். செப்பில் மனித உடலுக்கு நன்மை பயக்கும் நுண்ணிய ஊட்டச்சத்து அதிகம் இருக்கிறது. இதனால் இதனை பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் குறைவாக இருக்கும்.
2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய்களிலிருந்து எம்மை பாதுகாக்கிறது.
3. செரிமான பிரச்சினைகள் எமது முன்னோர்களுக்கு வருவது குறைவாக இருந்திருக்கும். இதற்கு முக்கிய காரணம் கலாச்சாரம் ரீதியிலான பழக்கங்கள் தான். செப்பு பாத்திரத்தில் சாப்பிடுவதால் செரிமான பிரச்சினை காலத்திற்கு வராது.
4. உடலில் அதிகம் சூடு பிரச்சினை பெண்களுக்கு அதிகம் இருக்கும். செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவதால் சூடு பிரச்சினை வராது. உடம்பு எந்த நேரமும் குளிர்ச்சியாக இருக்கும்.
5. வயிற்றுளைவு, புற்றுநோய் போன்ற மிகவும் ஆபத்தான சில நோய்கள் இவ்வாறான பாத்திரங்களில் சமைக்கும் போது ஏற்படாது. இதனையும் தவிர்த்து மண்சட்டிகளில் சமைத்தாலும் மேற்குறிப்பிட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம்.