cool drinks குடிச்சா முடி கொட்டுமா? இது தான் காரணம் தெரிந்தும் கூட இத பண்ணாதீங்க!
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது. இது இன்றைய ஆண், பெண் இருபாலாருக்கும் இருக்கும் பெரிய பிரச்சினையாகவே தான் இருக்கிறது.
தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது. ஆனால் கூல் ட்ரிங்க்ஸ் குடித்தாலும் முடி கொத்துக் கொத்தாய் கொட்டுமாம் என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா?
கூல் ட்ரிங்க்ஸால் முடிக்கு ஆபத்து
ஆம், நாம் கூல் ட்ரிங்க்ஸ் குடிக்கும் போது எமது ஆற்றல்கள் அதிகரிப்பது போல உணர்வுவோம்.
அதற்கு காரணம் கூல் ட்ரிங்க்ஸில் உள்ள கஃபைன் (caffeine), கூடுதலான சர்க்கரை ஆகியவை தான் காரணமாம். ஆரோக்கியமாக வாழ நினைக்கும் ஒரு மனிதர் நாளொன்றுக்கு 5இல் இருந்து 12 டீஸ்பூன் சர்க்கரை தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஆனால் கூல்ட்ரிங்ஸ் மூலம் குறைந்தபட்சம் 5 டீஸ்பூன் சர்க்கரை உடலுக்குள் செல்கிறது. அது தவிர காபி, டீ, இனிப்பு வகைகள் என வெவ்வேறு வழியில் இனிப்புகளை எடுத்து கொள்வோம்.
இது எமது உடலுக்கு நல்லது அல்ல. மேலும், கஃபைன் (caffeine) அதிகம் எடுத்து கொண்டால் மன அழுத்தம், வரும். இதனால் முடி உதிர்வும் அதிகமாகும்.
தானியங்கள், பருப்பு வகைகள், வேர்க்கடலை, மொச்சை, கொண்டைக்கடலை, முட்டை, மீன் ஆகியவை உண்பது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். அனைத்து சத்துகளும் கலந்த உணவுகளை எப்போதும் உண்ணும்போது முடி வளர்ச்சி அபாரமாக இருக்கும்.
எல்லா நிறங்களிலும் இருக்கும் பழங்கள், காய்கறிகள், உணவு வகைகளை சேர்த்து சரிவிகித உணவாக எடுத்து கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான கூந்தலை இப்படித்தான் பெற முடியும்.