புகழின் வாயை கிழித்து பிரியாணி ஊட்டிய காளையன்! பரபரப்பான ப்ரோமோ..
குக் வித் கோமாளியில் புகழுக்கு பிரியாணி ஊட்டுவதாக கூறி புகழின் வாயை கிழித்த காளையனின் செயல் சக போட்டியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குக் வித் கோமாளி சீசன் 4
பிக் பாஸ் போன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் முதலில் ஓடும் ஷோ தான் குக் வித் கோமாளி.
இந்த ஷோவில் ஒரு வித்தியாசம் இருக்கிறது கடந்த சீசனில் இருந்த சிவாங்கி, மணிமேகலை, புகழ், பாலா ,குரேஷி என சில போட்டியாளர்கள் இந்த சீசனிலும் இருக்கிறார்கள் இவர்களை நகைச்சுவையில் தான் இந்த ஷோ இன்று வரை நிக்காமல் ஓடிக் கொண்டிருக்கிறது.
கடந்த சீசன்களில் இருந்த ஸ்ருதிகா மற்றும் அஸ்வீன் ஆகிய இரண்டு டாப் போட்டியாளர்களும் இந்த சீசனில் கலந்துக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 4 ல் புதிய போட்டியாளராக தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ,மைம் கோபி ஆகிய பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளார்கள்.
இந்த ஷோவை வழமையாக கோமாளியாக கலக்கி மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த சிவாங்கி இந்த சீசனில் குக்காக களமிறங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து நான்காவது சீசனில் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா, ஜிபி முத்து, ஓட்டேரி சிவா, குரேஷி, தீபன், சுனிதா, மோனிஷா பிளெஸ்ஸி, ரவீனா தாஹா தெரிவாகியிருக்கிறார்கள்.

புதிய கூட்டணியில் கலக்கும் கோமாளிகள்
இவர்களின் கூட்டணி மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இந்த சீசனை சுவாரஸ்யப்படுத்தவார்கள் என ரசிகர்களால் நம்பப்படுகிறது.
அந்தவகையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளிவந்துள்ளது.
அதில் 'காளையனை கலாய்க்கும் நோக்கி புகழ் காளையனுக்கு பிரியாணி ஊட்டி உள்ளார். அதன் பின்னர் காளையன் பிரியாணி ஊட்டுவது என்ற பெயரில் புகழின் வாயை கிழித்துள்ளார் "
இந்த செயல் ஷோவில் இருந்த ஜட்ச்களாலும் தாங்க முடியாமல் சிரித்து தள்ளியுள்ளார்கள். மேலும் இந்த ஷோவில் யார் டைட்டில் வின்னர் என்ற ஆர்வம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.