காதலியை மணந்த புகழ்... யாருக்கும் தெரியாமல் திடீரென்று நடந்த திருமணம்! தீயாய் பரவும் புகைப்படம்
குக்கு வித் கோமாளி புகழ் 5 வருட காதலியை சத்தமில்லாமல் மணமுடித்து இருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
கடந்த சில வாரங்களாகவே புகழின் திருமணம் குறித்த செய்திகள் வெளியாகி கொண்டிருந்தது.
இப்படி ஒரு நிலையில் புகழின் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது.
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் காதலி குறித்து புகழ் வெளிப்படையாகவே பேசியிருந்தார்.

5 வருட காதலியை கரம் பிடித்த புகழ்
நாங்கள் ஐந்து வருடமாக நாங்கள் காதலித்து வருகிறோம். அவரை எனக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு ஆடிஷன் போகும்போது இருந்தே தெரியும்.
அவர் பெயர் பென்சி. நாங்கள் இந்த வருடம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறோம். கூடிய விரைவில் எங்கள் கல்யாணத்தைப் பற்றி சொல்கிறோம் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் திடீரென்று புகழ் திருமணம் செய்து கொண்டிருக்கின்றார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.