குக்வித் கோமாளி 2 கொண்டாட்டம்.. அஷ்வினை சரமாரியாக தாக்கிய ஷிவாங்கி! அவங்க இரண்டு பேர் இல்லையா?
குக் வித் கோமாளி சீசன் நிகழ்ச்சி எந்த அளவு வெற்றி என்பது சொல்லிதான் தெரியவேண்டியதில்லை.. முதல் சீசனும் இரண்டாவது சீசனும் மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது.
இரண்டாவது சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் மட்டுமின்றி குக்குகளும் பட வாய்ப்புகள் கிடைத்து செம்ம பிஸியாகவே உள்ளனர். அதிலும் அஸ்வின் ஒரே நேரத்தில் பல படங்களில் ஹீரோவாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதையடுத்து, இவ்வளவு பெரிய வரவேற்ப்பை பெற்ற குக்கு வித் கோமாளி 2 போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மீண்டும் ஒன்று சேரும் குக்கு வித் கோமாளி 2 கொண்டாட்டம் நிகழ்ச்சி தற்போது விஜய் டிவி எடுத்திருருக்கிறது.
அதில் அனைத்து போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மீண்டும் வந்து பங்கேற்று இருக்கிறார்கள். வழக்கமாக அவர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும் என எல்லோருக்கும் தெரியும், காமெடி அட்ராசிட்டிக்கு பஞ்சம் இருக்காது. வரும் ஞாயிறு அன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த ஷோ ஒளிபரப்பாகிறது.