CWC 6: நடுவர் விரித்த வலையில் இந்த வாரம் அதிரடியாக மோதும் நடிகைகள்- பிரியா ராமன் ஜெயிப்பாரா?
இந்த வாரம் குக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு லட்சுமி கிருஷ்ணனுக்கு போட்டியாக பிரியா ராமன் இறங்குகிறார்.
குத் வித் கோமாளி- 6
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தன்னுடைய 5 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது 6வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.
வழக்கமாக குத் வித் கோமாளி நிகழ்ச்சியிலுள்ள புகழ், குரேஷி, ராமர் மற்றும் சுனிதா இருக்கிறார்கள்.
இவர்களை தவிர்த்து நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரபலங்கள் அனைவரும் புது முகங்களாக இருக்கிறார்கள்.
அந்த வகையில், பிக் பாஸ் செளந்தர்யா, இன்ஸ்டா பிரபலம் சர்ஜின் குமார், கானா பாடகர் பூவையார் மற்றும் டோலி ஆகியோர் இணைந்துள்ளனர். மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு நடுவராக இருந்து வரும் நிலையில், அவர்களுடன் புது நடுவராக செஃப் கெளஷி இணைந்துள்ளார்.
அதே போன்று குக்குகளாக இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை பிரியா ராமன், அமரன் படத்தில் நடித்த உமர் லத்தீப், செம்பருத்தி தொடர் நாயகி ஷபானா, விவசாயி நந்த குமார், நடிகை ஜாங்கிரி மதுமிதா, மெரீனா கடற்கரை சுந்தரி அக்கா, யூடியூப் பிரபலம் செளந்தர்யா சில்லுகுரி, பிக் பாஸ் பிரபலம் ராஜு, நடிகர் கஞ்சா கறுப்பு ஆகியோர் களமிறங்கியிருக்கிறார்.
யார் வெற்றியாளர்?
இந்த நிலையில், குத் வித் கோமாளி சீசன் 6 வெற்றிகரமாக புதிய குக்குகள் மற்றும் கோமாளிகளுடன் ஆரம்பமாகியுள்ளது. இந்த வாரம் குக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொள்கிறார்கள்.
கோழிஇறைச்சிக்கு பப்பாளிப்பழம் காம்போவாக வழங்கப்படுகிறது. இப்படி முற்றிலும் பொருந்தாத இரண்டு பொருட்கள் கொடுக்கப்பட்டு, அதிலிருந்து ஒரு சுவையான சமையல் தயாரிக்க வேண்டும் என்பது தான் டாஸ்க். அதே சமயம், கடந்த வாரங்கள் போல் அல்லாமல் இந்த வாரம் எலிமினேஷன் நடக்கவுள்ளது.
கடந்த வாரம் குக் அல்ல செப்ஃ ஆகவே தகுதியான ப்ரியா ராமனுக்கு போட்டியாக லட்சுமி கிருஷ்ணன் இறங்குகிறார். இவர்கள் இருவருமே நன்றாக சமைக்கக் கூடியவர்கள் என்பதால் ரசிகர்களும் யார் வெற்றிப் பெறுவார் என்பதை காண ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வர ஆரம்பமாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |