மினி டாக்டராக மாறிய மீனா.. அடுத்த சீன் இதுவோ? குழப்பத்தை ஏற்படுத்திய பதிவு
மினி டாக்டராக மாறிய சிறகடிக்க ஆசை சீரியல் மீனாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கோமதி பிரியா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை கோமதி பிரியா.
இவர் மற்ற நடிகைகள் போல் அல்லாமல் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். குடும்பத்தில் மூன்று மருமகள்கள் இருக்கிறார்கள்.
அவர்களுக்குள் நடக்கும் சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் எப்படி நடக்கிறது என்பதனை கருவாகக் கொண்டே சீரியல் அடுத்தக்கட்டத்திற்கு நகர்கிறது.
இந்த சீரியலில் நாயகியாக இருக்கும் மீனா, குடும்பத்தை எப்படி சமாளித்து வைத்துக் கொள்கிறார் என்பதனை அழகாக சீரியலில் காட்டி வருகிறார்கள்.
மினி டாக்டரான மீனா
இந்த நிலையில், சீரியலை போன்று சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கோமதி ப்ரியா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்வார்.
அந்த வகையில்,சீரியலில் பொறுப்பான மருமகள் கதாபாத்திரத்தில் நடித்து வரும் கோமதி பிரியா டாக்டர் கெட்டப்பில் உள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தில் மீனா டாக்டர் கெட்டப்பில் இருப்பதை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள், “அடுத்த சீன் இதானா?” என நகைக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |