சமைக்கும் போது இதையெல்லாம் வேஸ்ட் பண்றீங்களா? உங்களுக்கே இந்த பதிவு
பொதுவாக நமது வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளின் கழிவுகளை வெளியே குப்பையில் தான் கொட்டுவோம். ஆனால் அவ்வாறு செய்யாமல் இவற்றை வைத்து பல விடயங்களை செய்ய முடியும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கழிவுகளை தூக்கி வீச வேண்டாம்
வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு அதன் தோலை குப்பையில் தூக்கி வீசிவிடுவோம். அவ்வாறு செய்யாமல் தோலின் உட்புறத்தினை முகத்தில் நன்கு தேய்த்து மசாஜ் செய்தால், முகம் மென்மையாக இருக்கும். இதே போன்று பற்களில் செய்தால் நன்கு வெண்மையாகும்.
எலுமிச்சை பழத்தினை பயன்படுத்திவிட்டு அதன் தோலை தூக்கி வீசும் நாம் இனி அந்த தவறை செய்யாமல், சமையலறையில் உள்ள கரைகளை எலுமிச்சை தோல், சிறிது பேக்கிங் சோடா வைத்து தேய்த்தால் கரைகள் நீங்கும்.
இதே போன்று உருளைக்கிழங்கு தோலை, கண்களில் மேலும் கீழும் மென்மையாக தேய்த்தால், கண்களில் ஏற்படும் வீக்கம், கருவளையம் இவைகள் நிச்சயம் மறையும்.
ஆரஞ்சு பழ தோலை வெயிலில் நன்கு காயவைத்து பொடி செய்து வைத்து, அதில் தயிர் கலந்து முகத்தில் தடவினால் பொலிவு கிடைக்கும். மேலும் ஆரஞ்சு தோல், சர்க்கரைய வைத்து மிட்டாயும் தயாரிக்கலாமாம்.
அடுத்ததாக சுரைக்காயை தோலை நன்கு நீரில் கழுவிவிட்டு, நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும். பின்பு கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை விட்டு தாளித்து, அதில் பெருங்காயம், புளிச்சாறு, உப்பு, காய்ந்த மிளகாய், சுரைக்காய் தோல் பேஸ்ட் சேர்த்து கலந்து சட்னியாக பரிமாறலாம்.
சமையலுக்கு சுத்தமாக பயன்படுத்த முடியாத தோல்கள், விதைகளை உரமாக பயன்படுத்தலாம். தோட்டத்தில் செடிகளை வளர்க்க இவற்றை உரமாக போடலாம்.