யாருக்கும் தெரிந்திடாத கிராமத்து சமையல் குறிப்புகள்- இனி இது தெரியாமல் இருக்காதீங்க
பொதுவாக பெண்கள் வீட்டு வேலைகளுடன் சமையலிலும் அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள்.
குடும்பத்தினர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என ஒவ்வொரு பெண்களும் பார்த்து பார்த்து சமைப்பார்கள். ஆனால் சில நேரங்களில் சமையலில் ஏதாவது தவறுகள் நடந்து விடும்.
அப்படி சமையலில் அடிக்கடி தவறுகள் நடந்தால் உங்களின் சமையல் வீட்டிலுள்ளவர்களுக்கு அழுப்பை உண்டாக்கி விடும்.
அந்த வகையில் சமைப்பதற்கு முன்னர் சமையலில் இருக்கு நுணுக்கங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம். அப்படி சமைப்பதற்கு முன்னர் அதில் பயன்படுத்தும் நுட்பங்கள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சமையல் குறிப்புகள்
1. வழக்கமாக நாம் காலையுணவாக எடுத்துக் கொள்ளும் பிரெட்டை முக்கோண வடிவில் டோஸ்ட் செய்து தாளித்த தயிரை அதன் மேல் ஊற்றி எடுத்தால் பிரெட் தயிர் வடை தயார்.
2. தோசைக்கு மாவு அரைக்கும் போது கொஞ்சம் ஜவ்வரிசி சேர்த்து அரைக்க வேண்டும். இது தோசையை மெல்லிதாகவும் பார்ப்பதற்கு பளபளப்பாக வைத்திருக்கும். சிறுவர்களை கவர்வதற்கு இதுவே சிறந்த வழியாகும்.
3. இட்லி செய்யும் பொழுது புளிக்கு பதிலாக சீவிய மாங்காய் துண்டுக்களை அரைத்து சட்னியுடன் சேர்த்து கொண்டால். சுவை அட்டகாசமாக இருக்கும். வீட்டிலுள்ள அனைவரும் விரும்பி உண்பார்கள்.
4. ஞாயிறு தினங்களில் வீட்டில் அசைவம் சமைக்கும் பொழுது மீன்களை பொரித்தால், அதன் வாசணை வீடு முழுவதும் இருக்கும். இதனை தவிர்ப்பதற்காக அடுப்பு பக்கத்தில் பெரிய மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கலாம்.
5. வழக்கமாக மீன் சாப்பிடும் பாத்திரத்தில் மீன் வாசம் இருக்கும். அப்பொழுது சீயக்காய்த்தூள் அல்லது புளி சேர்த்து பாத்திரத்தை கழுவினால் மீன் வாசணை இருக்காது.
6. ரவா தோசைக்கு முதல் நாள் இரவே மா கரைச்சல் தயார் செய்வது அவசியம். தோசை தயாரிக்கும் முன்னர் அதில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்து தோசை ஊற்றினால் மொறுமொறுவென வரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
