40 வயது பெண்கள் ப்ரீ மெனோபாஸை கையாள்வது எப்படி? மருத்துவர் விளக்கம்
40 வயதை நெருங்கும் பெண்களுக்கு உடல் ரீதியாகவும் மனம் ரீதியாகவும் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இந்த காலப்பகுதியில் இருக்கும் பெண்கள் மிட் ஏஜ் கிரைசிஸிலும் சிக்கிக்கொள்வார்கள்.
இளமை முதல் முதுமை வரை பெண்களுக்கு மாறும் பருவங்களால் தலைமுடி உதிர்வு, சருமம் சுருங்குதல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
பொலிவிழந்த சருமத்தினால் சிலர் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகுவார்கள். அதுவும் குறிப்பாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால், பெண்கள் அவர்களை மறந்து குழந்தைகளுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அப்படியானவர்களுக்கு அவர்களின் பருவத்தை எப்படி பராமரிப்பது என்பதற்கு மருத்துவர் சிலர் விளக்கங்களை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
மருத்துவ குறிப்புக்கள்
1. தினமும் புரதச்சத்து உள்ள உணவுகளை எடுத்து கொள்வது அவசியம். அதே போன்று ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவுகள் மற்றும் சிங்க் சத்துக்கள் நிறைந்த உணவுகளையும் அடிக்கடி எடுத்து கொண்டால் இளமை அப்படியே இருக்கும்.
2. ஸ்நாக்ஸிற்கு பதிலாக நட்ஸ் எடுத்து கொள்ளலாம். உதாரணமாக பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட்ஸ்கள் எடுத்து கொள்ளலாம். இது உங்களுடைய மூளையை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும்.
3. . நாள் முழுவதும் வேலைகள் செய்து கொண்டிருக்காமல் ஒரு நாளில் அரை மணி நேரம் அமைதியாக இருக்கலாம். அல்லது உங்களுக்கு பிடித்த இசையை கேட்டு ரசிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
