தாறுமாறாக சம்பளம் வாங்கிய மணிமேகலை: எவ்வளவு வாங்கியிருக்கிறார் தெரியுமா?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியிருந்த மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் தான் வாங்கிய சம்பளம் விபரம் வெளியாகி இருந்தது.
குக் வித் கோமாளி மணிமேகலை
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ஒன்றுதான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிகம் கவரப்பட்டது.
இதனால் முதலாம், இரண்டாம், மூன்றாம் சீசன் என கடந்து தற்போது நான்காவது சீசன் வரை வந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் குக்குகளை விட கோமாளிகளுக்கு தான் அதிக மவுசு.
இந்நிகழ்ச்சியில், கோமாளிகளாக மணிமேகலை, சுனிதா, ஜிபி முத்து, மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா, புகழ், குரேஷி, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா பிளஸ்சி ஆகியோர் கலக்கி வருகின்றனர்.
இதில் மணிமேகலை விதவிதமாக கெட்டப் போட்டு அனைவரையும் கவர்ந்தவர். இவ்வாறு மக்களை விரும்ப வைத்துவிட்டு தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்து விட்டார்.
இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், வேறு வேறு வாய்ப்புகள் வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சம்பள விபரம்
இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை அந்த நிகழ்ச்சிக்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு எபிசோடிற்கு மாத்திரம் 60 ஆயிரம் சம்பளம் வாங்கியிருக்கிறார்.
ஒரு எபிசோடிற்கு 60 ஆயிரம் என்றால் மாதத்திற்கு இவ்வளவு சம்பளமா என இணையவாசிகள் வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.