குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மோதல்! ஷிவாங்கியால் கடுப்பான செஃப்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எப்பொழுதும் நகைச்சுவையாக இருக்கும் ஷிவாங்கி செஃப் தாமு பேசியதால் சற்று மன வருத்தத்தில் இருக்கும் காட்சி வைரலாகி வருகின்றது.
குக் வித் கோமாளி
பிரபல ரிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. தற்போது மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், நான்காவது சீசன் தொடங்கியுள்ளது.
ரசிகர்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோவாக இருந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது ஷெரின், விசித்ரா, ஸ்ருஷ்டி, மைம் கோபி என புகழ்பெற்ற நடிகர், நடிகைகள் ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.
குறிப்பாக கடந்த சீசன் வரை கோமாளியாக இருந்து வந்த சிவாங்கி, இந்த சீசனில் குக்கு ஆக களமிறங்கி கலக்கி வரும் நிலையில், தற்போது வரை கிஷோர், காளையன், ராஜ் அய்யப்பா, விஜே விஷால் ஆகிய 4 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகியுள்ளனர்.
இந்நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் ஒரு புதிய டுவிஸ்ட்டாக, முதல் சீசனில் இருந்து ரேகா, இரண்டாவது சீசன் இருந்து ஷகிலா, மூன்றாவது சீசனில் இருந்து ரோஷினி ஆகியோர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் இன்றைய நிகழ்ச்சியின் போது சிவாங்கிக்கு பாகற்காய் சமைக்க வேண்டும் என்று கொடுக்கப்படுகிறது. அப்போது அவர் தன்னால் பாகற்காய் சமைக்க முடியாது என்று கூற, இதனால் கடுப்பான செஃப் தாமு நீங்கள் ஒரு போட்டிக்கு வந்துள்ளீர்கள், தற்போது வரை 15 வாரங்கள் கடந்துள்ளது.
அதனால் நாங்கள் கொடுத்த பொருளை வைத்து சமைக்க வேண்டும், முடியாது என்று கூறிய அடம்பிடிக்க கூடாது என்று கடுமையாக திட்டினார். இதனை அடுத்து சிவாங்கியின் முகம் சோகமாகியது.
Enna Serious-aa pogudhu?#CookuwithComali4 #CookuwithComali #DisneyPlusHotstar pic.twitter.com/lBKb9O8LGr
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) April 16, 2023