உறையவைத்த சிவாங்கியின் பாட்டு... ரஹ்மான் கொடுத்த சர்ப்ரைஸ்! இன்ப அதிர்ச்சியில் துள்ளி குதித்த காட்சி
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2வது சீசன் தற்போது நிறைவடைந்துள்ளது.
இந்த கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி தமிழ்ப்புத்தாண்டு அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பானது.
இந்நிகழ்ச்சியில் கனி டைட்டில் கார்டு வென்றார்.
சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்துகொள்வதற்கு முன்னதாக, இணைய வழியில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டார்.
What more do I want?🥺❤️@arrahman #cookwithcomali2 pic.twitter.com/5dS33TOMYz
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) April 16, 2021
அப்போது சில்லுனு ஒரு காதல் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முன்பே வா.. அன்பே வா பாடலை ஏ.ஆ.ரஹ்மான் முன்பாக சிவாங்கி உருக்கமாக பாடினார்.
அனைவரையும் உறையவைத்த இந்த பாடலை கேட்டதும், வியந்து போன ஏ.ஆர்.ரஹ்மான், குக் வித் கோமாளி போட்டியாளர்களிடம், “உங்களுக்கு சமைக்கும்போது சமையலில் தேன் எதுவும் சேர்க்க வேண்டியிருந்தால், சிவாங்கியை பாட வைத்தாலே போதும்.. தேன் தானாக சமையலில் வந்து விழுந்துவிடும்” என கூறினார்.
குறித்த காட்சியை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.