குக் வித் கோமாளி கனியின் மகள்களை பார்த்ததுண்டா? எம்புட்டு வளர்த்திருக்காங்கனு நீங்களே பாருங்க
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது இது இறுதி கட்டத்தை நெருங்கி வரும் இந்த இரண்டாவது சீசனில், கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தா, பவித்ரா ஆகிய 4 பேர் எலிமினேட் ஆன நிலையில் மற்ற 4 பேரும் போட்டியில் இருக்கிறார்கள். இதில் டாஸ்க் அனைத்தையும் சிறப்பாக செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் கனி.
இவர் தேசிய விருது பெற்ற இயக்குநர் அகத்தியனின் மூத்த மகள், இயக்குநர் திருவின் மனைவி. நடிகைகள் விஜய லட்சுமி மற்றும் நிரஞ்சனியின் மூத்த சகோதரி. தற்போது தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தினை கனி இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் கனிக்கு இவ்வளவு பெரிய குழந்தைகள் இருக்கின்றனரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.