எனக்கு ஊசின்னா ரொம்ப பயம்... குக் வித் கோமாளி பவித்ராவின் செயலால் குவியும் பாராட்டுக்கள்
குக் வித் கோமாளி சீசன் -2 மூலம் பிரபலமானவருமான நடிகை பவித்ரா தற்போது தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியா மற்றும் தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று உண்டுபண்ணிவரும் அதிர்வினை அனைவரும் எச்சரிக்கையுடன் எதிர்கொண்டு வருகின்றனர்.
இன்னொருபுறம் இந்த வழக்கமான தனிமனித ஒழுக்கத்தால் கடைபிடிக்கப்படும் முறைகளைத் தாண்டி தடுப்பூசி ஒன்று தான் அறிவியல் பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிரத்தியேக மருந்து எனும் வகையில் கோவிட் தொற்றை தடுக்கும் பொருட்டு தடுப்பூசி அணிவதை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த், வசந்தபாலன் மற்றும் நடிகர்கள், பிரபலங்கள் என பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகின்றனர்.
தற்போது நடிகை பவித்ரா தற்போது தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். இந்த ஃபோட்டோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட அவர்,"ஊசின்னா எனக்கு ரொம்ப காலமாகவே பயம்.
நிஜமாவே ரொம்ப பயந்துட்டேன். ஆனா ஒரு வழியாக தடுப்பூசி போட்டுட்டேன் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். பவித்ர லட்சுமியின் இந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
இதனை அவர் பதிவிட்ட ஒரு மணி நேரத்திலேயே கிட்டதட்ட ஒரு லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். பிரபல மாடலான பவித்ரலட்சுமி அவ்வப்போது கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்தி தான் பரபரப்பை கிளப்புவார். இன்று இவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஃபோட்டோவும் வைரலாகி வருகிறது.
பவித்ரலட்சுமி தற்போது காமெடியன் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.