குக் வித் கோமாளியில் இந்த வாரம் வெளியேறுவது இவரா? வெளியானது பரபரப்பான ப்ரொமோ
பிரபல தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் பட்டாளத்தினை அதிகமாக கொண்டுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறுவது குறித்து ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. 'குக் வித் கோமாளி’ முதல் சீசனின் டைட்டிலை பிக் பாஸ் வனிதா விஜயகுமார் வென்ற நிலையில், ரன்னராக ரம்யா பாண்டியன் வந்தார். இந்நிலையில் தற்போது இரண்டாவது சீசன் சென்று கொண்டிருக்கின்றது.
இதில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தா எலிமினேட் ஆன நிலையில் மற்ற 5 பேரும் போட்டியில் இருக்கிறார்கள். இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்டு நடைப்பெறுகிறது.
ஷகிலா, பாபா பாஸ்கர், கனி, பவித்ரா, அஸ்வின் ஆகிய 5 பேரில் யார் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இதன் ஆர்வத்தினை அதிகரிக்கும் விதமாக பிரபல ரிவி ப்ரொமோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதில் இறுதியில் இரு இடங்களைப் பிடித்த அஸ்வினும், பவித்ராவும் தங்களது திறமையினை நிரூபிக்க வேண்டியுள்ளது.
இதற்காக இவர் ப்ரோகோலியை தெரிவு செய்து தனது திறமையினால் சமைத்து கொண்டு வருகின்றனர். இதற்கு நடுவர் வைத்துள்ள ட்விஸ்ட் ஒட்டுமொத்த ரசிகர்களையும் பயங்கர எதிர்பாப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே பதட்டமாவே இருக்கே..!#CookWithComali - வரும் சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #VijayTelevision pic.twitter.com/GnwT3xZmll
— Vijay Television (@vijaytelevision) March 12, 2021