CWC 6: Identity Food சுற்றில் வெற்றியாளராக மாறிய 3 போட்டியாளர்கள்- முதல் நாளே அடித்த ஜாக்போட்
குத் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் Identity Food சுற்றில் வெற்றியாளராக மாறிய போட்டியாளர்களின் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
குத் வித் கோமாளி- 6
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தன்னுடைய 5 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது 6வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.
வழக்கமாக குத் வித் கோமாளி நிகழ்ச்சியிலுள்ள புகழ், குரேஷி, ராமர் மற்றும் சுனிதா இருக்கிறார்கள்.
இவர்களை தவிர்த்து நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரபலங்கள் அனைவரும் புது முகங்களாக இருக்கிறார்கள்.
அந்த வகையில், பிக் பாஸ் செளந்தர்யா, இன்ஸ்டா பிரபலம் சர்ஜின் குமார், கானா பாடகர் பூவையார் மற்றும் டோலி ஆகியோர் இணைந்துள்ளனர். மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு நடுவராக இருந்து வரும் நிலையில், அவர்களுடன் புது நடுவராக செஃப் கெளஷி இணைந்துள்ளார்.
அதே போன்று குக்குகளாக இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை பிரியா ராமன், அமரன் படத்தில் நடித்த உமர் லத்தீப், செம்பருத்தி தொடர் நாயகி ஷபானா, விவசாயி நந்த குமார், நடிகை ஜாங்கிரி மதுமிதா, மெரீனா கடற்கரை சுந்தரி அக்கா, யூடியூப் பிரபலம் செளந்தர்யா சில்லுகுரி, பிக் பாஸ் பிரபலம் ராஜு, நடிகர் கஞ்சா கறுப்பு ஆகியோர் களமிறங்கியிருக்கிறார்.
வெற்றிப் பெற்ற போட்டியாளர்கள்
இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் குத் வித் கோமாளி சீசன் 6 வெற்றிகரமாக ஆரம்பமாகியுள்ளது.
முதல் நாள் என்பதால் குக்குகளுக்கு அவர்களை அடையாளப்படுத்தும் வகையில், உணவுகளை சமைக்குமாறு நடுவர்கள் டாஸ்க் கொடுத்திருந்தார்கள். அதில், உமர் லத்தீப்- சரத், பிரியா ராமன்- ஜோலி மற்றும் ஷபானா- குரேஷி ஆகியோர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டனர்.
மற்ற போட்டியாளர்கள் சமைத்த உணவுகளை விட இவர்களின் உணவு தனித்துவமான சுவையிலும், குக்குகளை கவரும் விதத்திலும் இருந்ததாக நடுவர்கள் கூறினார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |


