இதெல்லாம் அநியாயம்.. மயில்சாமி இறந்த பிறகு புலம்பி தள்ளும் மகன்- என்ன நடந்தது?
“என்னுடைய அப்பா இறந்த பின்னர் எனக்கு யாரும் வாய்ப்பு தரவில்லை..” என மயில்சாமி மகன் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகராக இருந்தவர் தான் நடிகர் மயில்சாமி.
இவர், சினிமாவில் நடித்தது மட்டுமல்லாமல் பலருக்கு உதவி செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.
இதற்கிடையில் கடந்த 2023ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் தள்ளியது.
மயில்சாமி மகன் கூறியது..
இந்த நிலையில் அவரின் மகன் அன்பு பேட்டியில் ஒன்றில் பேசும் பொழுது பகிர்ந்துக் கொண்ட விடயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது, “என்னுடைய அப்பா பலருக்கு உதவி செய்திருக்கிறார். அவரிடம் பணம் இல்லை என்றால் மற்றவர்களிடம் கடன் வாங்கி உதவி செய்வார். அவர் இறந்த பின்னர் நான் நடிக்க வாய்ப்பு தேடினேன். ஆனால் யாரும் தரவில்லை. மாறாக பல இயக்குநர்கள், நடிகர்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை.
அவர்களை சில சமயங்களில் வெளியில் சந்தித்தால் “என்னை பார்க்க முயற்சி செய்தீர்களா?.. எனக்கு தெரியவே தெரியாதே..” என்பார்கள். அப்பாவின் நண்பர்களும் சினிமாவில் இப்போது இருக்கிறார்கள்.
அவர்களும் உதவிச் செய்ய முன்வரவில்லை. அப்பாவோடும் நடிக்க நான் முயற்சி செய்தேன். ஆனால், கடைசி வரை என்னோடு நடிப்பதில்லை என்பதில் தீவிரமாக இருந்தார்..” என பேசியிருந்தார்.
மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் இவ்வாறு பேசியது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |