சர்ச்சையில் சிக்கிய பிரபலம் பிக்பாஸுக்கு வராராமே! தீயாய் பரவும் தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக மேலும் ஒரு பிரபலத்தின் பெயர் அடிபட்டு வருகிறது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான வேலைகளில் நிகழ்ச்சி குழு தீவிரமாக இறங்கியுள்ளது. இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளதால் பங்கேற்க போகும் போட்டியாளர்களிடமும் நிகழ்ச்சிக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதனால் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் குறித்து நாள் தோறும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அப்படி பரவும் தகவல்களில் தங்களின் பெயர் அடிபடும் சில பிரபலங்கள், அது எந்தளவுக்கு உண்மை என்பது குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் நகுல் பெயர் பிக்பாஸில் அடிப்பட்ட நிலையில் தான் பங்கேற்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று விளக்கம் அளித்தார் நகுல்.
அதாவது, யூட்யூப் பிரபலமான மதன் கவுரியிடம் பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. யூட்யூப் பிரபலமான மதன் கவுரிக்கு ஏராளமான ஃபாலோயர்ஸ் உள்ளனர். தனக்கு தெரிந்த விஷயங்களையும் தான் படித்த விஷயங்களையும் சுவாரசியமாக பகிர்ந்து கொள்வதாலேயே அவரை ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். மதன் கவுரி கடந்த 2019ஆம் ஆண்டு இளம் பெண் ஒருவருடன் செக்ஸ் சாட்டில் ஈடுபட்டதாக சர்ச்சையில் சிக்கினார்.
மதன் கவுரியின் அரை நிர்வாண போட்டோக்களும், அவர் பேசிய ஆபாச பேச்சின் ஸ்க்ரீன் ஷாட்டுக்களும் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அவரது பெயர் அடிபட்டு வருகிறது.