இந்த வாரம் அதிரடியாக வெளியேறும் சின்னத்திரை பிரபலம்! அனல் பறக்கும் பிக் பாஸ் ஓட்டிங்
பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
பத்தாவது வாரத்திற்கு செல்லும் போட்டியாளர்கள்
பிரபல தொலைக்காட்சியில் 21 பிரபலங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக பிக் பாஸ் சீசன் 6 ஓடிக் கொண்டிருக்கிறது.
இதில் கலந்துக்கொள்ளும் பிரபலங்கள் நன்கு மக்களுக்கு பழகியவர்களாக இருப்பார்கள்.
பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பிக்கும் போது இருந்த போட்டியாளர்களில் சுமார் 10 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளார்கள்.
தற்போது பத்தாவது வாரத்தில் ரக்ஷிதா, மணிகண்டன், அசிம், தனலெட்சுமி, சிவின், விக்ரமன், கதிர், ஏடிகே, அமுதவாணன், மைனா நந்தனி, ஜனனி உள்ளிட்டோர் விளையாடி வருகிறார்கள்.
மேலும் இதிலுள்ள பிரபலங்களில் மைனா நந்தனி மற்றும் ரக்ஷிதா இருவரும் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர்கள். இதனால் இவர்கள் டைட்டில் வின்னராக மாறுவார்கள் என பிக் பாஸ் வீட்டினுள் சென்றார்கள்.
ஆனால் இவர்கள் தன்னுடைய பெயர் அடி வாங்க கூடாது என நினைத்து சேவ் கேம் விளையாடி வருகிறார்கள்.
வெளியேறும் பிரபலம்
இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் மணிகண்டன், அசிம், ரக்ஷிதா, விக்ரமன்,ஏடிகே, ஜனனி போன்றோர் சிக்கியுள்ளார்கள்.
மேலும் இந்த வாரம் இலங்கையொருவர் அல்லது சின்னத்திரை பிரபலங்களில் ஒருவர் வெளியெறுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கபடுகிறது.
ஆனால் குறைவான வாக்குகளால் மணிகண்டன் வெளியேறுவார் என ஓட்டிங் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் சேவ் கேம் விளையாடும் பிரபலங்களை முகத்திரையை கிழித்து வெளியேற்றுங்கள் என கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.