மலச்சிக்கலால் அவஸ்தையா? இப்போ இருந்து இந்த பழங்களை சாப்பிடுங்க- உடனடி நிவாரணம்
கோடைக்காலம் வந்து விட்டதால் இனி வரும் நாட்களில் உணவு பழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். அத்துடன் நீர்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை தேடி தேடி சாப்பிட வேண்டும்.
இப்படி அதிகம் வெப்பம் இருப்பதால் வெளியில் வேலைச் செய்பவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது.
மற்ற நோய்களை விட மலச்சிக்கல் நோய் வருவதற்கு முக்கிய காரணம் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாதது தான். மலச்சிக்கலைத் தடுக்க வேண்டுமானால் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வது அவசியம்.
அத்துடன் நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக சீசன் பழங்களானது, அந்த சீசனில் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்க்கும் ஆற்றலைக் கொண்டிருக்கும்.
எனவே கோடைக்காலத்தில் மலச்சிக்கல் பிரச்சினையுள்ளவர்களுக்கு சில பழங்கள் உடனடி நிவாரணம் கொடுக்கிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அப்படியாயின், மலச்சிக்கல் பிரச்சனையை தடுப்பதற்கு கோடைக்காலங்களில் சாப்பிட வேண்டிய பழங்கள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம்.
மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு
1. குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்து கொள்ள ஆப்பிள் பழம் உதவியாக இருக்கிறது. இந்த பழத்தில் பெக்டின் என்னும் நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கலில் இருந்து விடுபட பெரிதும் உதவியாக இருக்கிறது. ஆப்பிள் பழத்தின் முழுமையான பலனை பெற நினைப்பவர்கள் தோலூடன் சாப்பிட வேண்டும்.
2. ஆரஞ்சு பழம் மலச்சிக்கலில் இருந்து விடுவிப்பதற்கு உதவியாக இருக்கிறது. இதிலிருக்கும் இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை விரும்பி சாப்பிட வைக்கும், அத்துடன் ஆரஞ்சு பழங்களில் அதிகமான நார்ச்சத்துக்கள் இருக்கிறது. இது குடலியக்கத்தை சீராக வைத்துக் கொள்ளும். வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும்.
3. கோடைக்காலத்தில் மட்டுமின்றி, அனைத்து காலங்களிலும் பப்பாளிப்பழம் சிறந்த தீர்வாக உள்ளது. இந்த பழத்தை சந்தையின் பெற்றுக் கொள்ளலாம். தினமும் சாப்பிட்டு வரும் ஒருவரின் குடலியக்கம் சீராக இருக்கும். அத்துடன் பாப்பைன் என்னும் நொதிப் பொருள் உணவை எளிதாக உடைத்து குடலில் நகர்த்தி செல்கிறது.
4. கோடைக்காலம் அதிகம் விளையும் மாம்பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினைகள் குறையும். மாம்பழத்திலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை இலகுவாக்கிறது. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் இந்த பழத்தை வாங்கி சாப்பிடலாம்.
5. கோடைக்கால பழமான தர்பூசணியில் அதிகமான நீர்ச்சத்து உள்ளது. இதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த தீர்வு கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |