வேப்பிலை சாப்பிடுவதால் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியுமா? தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்
வேப்பிலை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் முடியுமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோய்
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நபர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு மரபணு, உடல் பருமன் என பல காரணங்களால் இந்நோய் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றது.
இந்நோயை முழுவதுமாக குணப்படுத்துவதற்கு எந்தவொரு வழிமுறையும் இல்லாத நிலையில், கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே மருந்துகள் உதவி செய்கின்றது.
உணவு பழக்கவழக்கங்கள், போதுமான உடல் உழைப்பு இல்லாத காரணத்தினாலும் ஏற்படுகின்றது. ஓரளவிற்கு நமது வாழ்க்கை முறையை கட்டுக்குள் வைத்துக் கொண்டால் நீரிழிவு நோய் குறித்த கவலை நாம் கொள்ள தேவையில்லை.
நீரிழிவு நோயாளிகள் வேப்பிலையை எடுத்துக் கொள்வதால் அதனை கட்டுப்படுத்த முடியுமா என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
மூன்று வகையான நீரிழிவு
டைப் 1 நீரிழிவு, டைப் 2 நீரிழிவு, கர்ப்ப கால நீரிழிவு என மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. டைப் 1 நீரிழிவு நோய் என்பது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு (Autoimmune Response) தன்னுடைய கணையத்தின் பீட்டா செல்களை அழிக்கிறது. இதனால், இன்சுலின் உற்பத்தி நிற்கிறது. பொதுவாக குழந்தைகள்/இளம் வயதினருக்கு இந்த பிரச்சனை வரும்.
டைப் 2 நீரிழிவு நோய் என்பது இன்சுலின் தடை (Insulin Resistance), அதாவது உடல் இன்சுலினை சரியாக பயன்படுத்த முடியாதபோது வருவது ஆகும். உடல் பருமன் (Obesity), தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறை, பரம்பரையாக குடும்பத்தில் நீரிழிவு இருந்தால் இந்த நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
மூன்றாவது கர்ப்ப கால நீரிழிவு நோய் என்பது கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் இன்சுலின் தடையை ஏற்படுத்துவதால் வருவது ஆகும்.
வேப்பிலை
வேப்பிலை பாரம்பரியமருத்துவத்தில் ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைக்கின்றது. வேப்பிலையில் உள்ள நிம்போலிட், நிம்பினால் போன்ற சேர்மங்கள் இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன.
கல்லீரல் மற்றும் கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. 30 நாட்கள் தினமும் 1-3g வேப்பிலை தூள் சாப்பிட்ட நீரிழிவு நோயாளியின் ரத்த சர்க்கரை 18-29% குறைவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் வேப்ப எண்ணெய்யையும் குளுக்கோஸ் அறிஞ்சுதலை குறைப்பதும் தெரியவந்துள்ளது. 3-5 வேப்பிலைகளை உலர்த்தி பொடி செய்து, காலையில் வெந்நீரில் கலந்து குடிக்கவும். அதுவே 10-15 இலைகளை அரைத்து, சாறு எடுத்து தேன் சேர்த்து குடிக்கவும்.
ஆனால் வேப்பிலையை அதிகமாக சாப்பிடக்கூடாது. வேப்பிலையில் கொயினா எனும் வேதிப்பொருள் அதிகமாகினால் கல்லீரல் பிரச்சனை ஏற்படுத்தும்.
வேப்பிலை மட்டும் எடுத்துக் கொள்வதால் நீரிழிவு நோய் முழுவதும் கட்டுக்குள் வைக்க முடியாது. கேழ்வரகு, பச்சை காய்கறிகள் இவற்றினையும் எடுத்துக் கொள்வதுடன், 30 நிமிடம் உடற்பயிற்சி மேற்கொள்ளவும் வேண்டும்.
கர்ப்பிணிகள், குறைந்த இரத்தச் சர்க்கரை உள்ளவர்கள், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் வேப்பிலை எடுத்துக் கொள்ளக்கூடாது. நீரிழிவு நோயாளிகள் வேப்பிலையை டாக்டரின் ஆலோசனையுடன் பயன்படுத்தவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |