மாதவிடாய் நேரத்தில் மலச்சிக்கலா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும்
பெண்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுள் தவிர்க்க முடியாதது மாதவிடாய்.மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினை வருவது வயிற்றுவலியை போல் சாதாரண நிகழ்வுதான்.
இது சற்று அசௌகரியமான விடயம்தான் என்றாலும் இந்த பிரச்சினையை தவிர்க்க இயலாது என்கின்றனர் மருத்துவர்கள்.காரணம் அதனை மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியாது என்பது தான். இதனை நம் அன்றாட உணவில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் குறைத்துக் கொள்ளலாம்.
பொதுவாக இவ்வாறான பிரச்சினை ஏற்படுவதற்கு ஹோர்மோன் பிரச்சினையே காரணம். மாதவிடாய் வருவதற்கு 2-3 நாட்களுக்கு முன்பிலிருந்தே மலச்சிக்கல் பிரச்சினையும் தொடங்கிறது. அப்போதிலிருந்தே உடலில் புரோகெஸ்ட்ரோன் ஹோர்மோன் அதிகளவில் சுரக்கத் தொடங்கிவிடுகின்றது இதுவே மலச்சிக்கலுக்கு காரணமாக அமைகின்றது.
தவிர்க்கும் வழிகள்
இந்த ஹோர்மோன் உற்பத்தி வயிற்றில் செரிமான ஆற்றலை குறைக்கும். எனவே, இதுதான் மலச்சிக்கலுக்கு காரணமாக இருக்கின்றது.
இதனை தவிர்க்க மாதவிடாய் தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பும், மாதவிடாய் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்திலும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தினசரி உணவுப் பழக்கத்தில் சற்று கூடுதலாக நார்ச்சத்து கொண்ட பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
பாஸ்தா, பீட்ஸா பிரெட் வகைகள், பிஸ்கட்ஸ் , பரோட்டா போன்ற மைதாவில் செய்யப்படும் உணவுகளை முற்றிலுமாகத் தவிர்த்துக்கொள்ளலாம்.
இது மலச்சிக்கல், வாயுத் தொல்லை , அஜீரணம் மற்றும் இரத்தத்தில் சர்க்கரை சமநிலையின்மை போன்ற பிரச்னைகளை உண்டாக்கும்.
அப்பிள், பீன்ஸ், கீரை வகைகள், தானியங்கள், வாழைப்பழம், கெரட், ப்ரக்கோலி, மக்காசோளம், சியா விதைகள் வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை சாப்பிடலாம்.
உணவு மட்டுமன்றி இந்த நாட்களில் வழக்கமான பருகும் தண்ணீரை விட சற்று அதிகமாக அருந்துவதன் மூலம் குறிப்பாக அதிகளவில் வெதுவெதுப்பான நீரை அருந்துவதன் மூலம் மலச்சிக்கலை தவிர்த்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |