பீட்சா, பர்கர் பிரியரா நீங்க? இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக துரித உணவுகள் அதிகமாக சாப்பிடும் பொழுது அது வயிற்றில் ஏகப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
அது மட்டுமன்றி நொருக்கு தீனிகள் அதிகமாக சாப்பிட்டால் 34 வகையான புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இப்படியான மருத்துவ ஆபத்துக்கள் இருந்தாலும் தற்காலத்தில் துரித உணவுகளை விரும்பி சாப்பிடும் பழக்கம் அணைவரிடமும் இருக்கின்றது.
அந்த வகையில் துரித உணவுகள் அதிகமாக சாப்பிட்டால் என்ன மாதிரியான ஆபத்துக்கள் ஏற்படும் என தொடர்ந்து பார்க்கலாம்.
பர்க்கர் அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்?
1. பர்கரில் இருக்கும் சீஸ், மயோனைஸ் உள்ளிட்டவை உடலில் கொழுப்பை அதிகரிக்க செய்யும். இதனால் எடை அதிகரிப்பும் ஏற்படும்.
2. சீஸ் பர்கர் வகைகளிலுள்ள அதீத கொழுப்பு காரணமாக எடை வேகமாக அதிகரிக்கும்.
3. பர்கரை பதப்படுத்துவதற்காக சில வகையான இரசாயனம் கலக்கப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவார்கள் இது உடல்நலத்தை பாதிக்கும்.
4. தொடர்ந்து பர்க்கர் சாப்பிடும் பொழுது வயிற்று கோளாறுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது. ஏனெனின் பர்க்கரில் கலக்கப்படும் கோதுமை செரிமானத்தை பாதிக்கும்.
5. சீஸ் போன்ற பதார்த்தங்களினால் சேரும் கொழுப்புக்கள் இதயம் சார்ந்த நோய்களை ஏற்படுத்துவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |