கம்ப்யூட்டர்ல வேலையால் உங்க கை மரத்து போச்சா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக தான்!
பொதுவாக இன்றைய நவீன மாற்றத்தால் ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்க்கும் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
எந்நேரமும் கம்ப்யூட்டர் முன்னாடியே உட்கார்ந்து இருக்க வேண்டிய சூழல் உள்ளது.
இதனால் கை வலி, கண் வலி மற்றும் முதுகு வலி போன்ற பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
மேலும் லேப்டாப்பில் வேலை பார்க்க போது கைகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாக கூச்ச உணர்வு, உணர்வின்மை மற்றும் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
இதனை எப்படி சரிச் செய்வது என பலரும் புலம்பிக் கொண்டிருப்பார்கள்? இதனை சரிச் செய்வதற்கு என்ன மாதிரியான டிப்ஸ்களை பின்பற்றலாம் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
கை மரத்து போச்சா?
சிவப்பு கம்பள வரவேற்புடன் உள்ளே நுழையும் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! பிரதீப்பை நினைத்து கதிகலங்கிய பிக் பாஸ் வீடு
1. மடி கணினியில் வேலை செய்யும் பொழுது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை உங்கள் கைகளை நன்றாக நீட்டி ஓய்வெடுங்கள்.
2. வேலையின் போது கை மற்றும் மணிக்கட்டு தளர்வாக வைத்து கொள்ள வேண்டும்.
3. வேலை பார்க்கும் கணினியின் கீபோர்டை முழங்கை உயரத்திற்கு வைக்க வேண்டும்.
4. அமர்ந்து வேலை பார்க்கும் பொழுது முதுகை நேராக வைத்து இருப்பது அவசியமாகும். இல்லாவிட்டால் முதுகு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமாக வரும்.
5. எளிய மணிக்கட்டு உடற்பயிற்சிகளை அடிக்கடி தனக்கு தானே செய்து கொள்வது அவசியமாகும். 6. க்ஷீரபால தைலம் கொண்டு கை மசாஜ் செய்யலாம். இதனால் வலிகள் குறைவதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளது.
கம்பேக் கொடுக்கும் பிரதீப்- ரசிகர்களை திசைத்திருப்பி விட்டு எதிர்பாராத நேரம் உள்நுழையும் போட்டியாளர்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |