பிரபல தெலுங்கு நடிகர் கைது- அவதூறு பேச்சு வழக்கில் அதிரடி முடிவு
பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் போசனி கிருஷ்ண முரளி ஆந்திர போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போசனி கிருஷ்ண முரளி
தெலுங்கு சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் போசனி கிருஷ்ண முரளி.
இவர், 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு கிருஷ்ண முரளி திரைக்கதை எழுதியுள்ளார்.
இந்த நிலையில், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நாரா லோகேஷ், பவன் கல்யாண் ஆகியோருக்கு எதிராக அவதூறு கருத்துகளை கிருஷ்ண முரளி பேசியதாக கூறப்படுகிறது.
காரணம்
இதனை தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியினர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர்.
இதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக, கிருஷ்ண முரளி ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலங்கானாவில் இருந்து ஆந்திர பிரதேசத்திற்கு அழைத்து சென்ற பொலிஸார், கிருஷ்ண முரளியிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த செய்தி தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
