Neeya Naana: மாமியார் வீட்டில் பிரியாணியில பீஸே வைக்கலை! குமுறிய மருமகன்... கோபிநாத் ரியாக்ஷன்
நீயா நானா நிகழ்ச்சியில் காதல் திருமணத்தை எதிர்த்த பெற்றோர்கள் மற்றும் இளம் தம்பதிகள் என்ற தலைப்பில் இந்த வாரம் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் காதல் திருமணத்தை எதிர்த்த பெற்றோர்கள் மற்றும் இளம் தம்பதிகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பிள்ளைகளின் காதலுக்கு பெற்றோர்கள் பயங்கர எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதன் பின்பு வீட்டிற்கு வந்த மருமகனை எவ்வாறு பார்த்துக் கொள்கின்றனர் என்பது குறித்து பேசப்பட்டுள்ளது.
மருமகன் ஒருவனுக்கு மாமியார் வீட்டில் பிரியாணி பரிமாறும் போது பீஸே வைக்கவில்லை என்று அரங்கத்தில் கூறியுள்ளார்.
மருமகன் தன்னை பிள்ளை போன்று பார்த்துக் கொள்வதாக மாமனார் அரங்கத்தில் கண்ணீர் வடித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
