குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழையும் பிரபலம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக்வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சியில் வரும் எதார்த்தமான நடிப்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனையடுத்து, இந்நிகழ்ச்சியின் வெற்றியின் மூலம், புகழ், சிவாங்கி என பலரும் திரையுலும் நடிப்பதற்காகவும் சென்றுள்ளனர்.
அந்த வகையில், சீரியல் நடிகை தர்ஷா குப்தா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடிக்கும் ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இத்திரைப்படத்தை திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி இயக்குகிறார். மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்ட இவர் சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது அவரிடம் மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த தர்ஷா குப்தா, கண்டிப்பாக வருவேன். ஆனால் எப்போது வருவேன் என தெரியவில்லை.
சமைக்கிறேனோ இல்லையோ பழைய நண்பர்களுடன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே வருவேன் எனத் தெரிவித்துள்ளார்.