உடல் எடை குறைக்கும் கொள்ளு மசியல் - ரெசிபி இதோ
இளைத்தவனுக்கு எள்ளு கொளுத்தவனுக்கு கொள்ளு என கூறுவார்கள். கொள்ளு சாப்பிட்டால் பல ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்.
கொள்ளு உடல் எடையைக் குறைப்பதுடன், கொழுப்பைக் கரைக்கவும், கெட்ட நீரை வெளியேற்றவும், சிறுநீரகம் மற்றும் கல்லீரலைப் பாதுகாக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், யூரிக் அமிலத்தைக் குறைக்கவும், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தவும் உதவும்.
ஆனால் எதையும் சுவையாக செய்தால் தானே நம்மால் சாப்பிட முடியும். நாக்கையும் கொஞ்சம் மதிக்க வேண்டும் அல்லவா. அதற்காகவே கொள்ளை வைத்து சுவைான மசியல் செய்முறை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
- கொள்ளு - 200 கிராம்
- சீரகம் , தனியா -தலா 1 தேக்கரண்டி
- தக்காளி - 2
- காய்ந்த மிளகாய் - 4
- பூண்டு - 5 பல்
- சிறிய வெங்காயம் - 10
- புளி - நெல்லிக்காய் அளவில் பாதி
- கறிவேப்பிலை - 10 இலைகள்
- கொத்தமல்லி இலை
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெறுமையாக கொள்ளை சிவக்க வறுக்கவும்.
கொள்ளையும் அரைத்தவுடன் முன்பே அரைத்தக் கலவையில் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |