கடும் போட்டியிடையே.. கமலின் தற்போதைய நிலை என்ன? இந்திய அளவில் ட்ரெண்டிங்
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
மேலும், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதல்வராவது உறுதியாகி உள்ளது. இந்த வெற்றிக்காக ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, ட்விட்டர் டிரெண்டிங்கில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஆகியோர் முன்னணியில் இருந்து வருகின்றனர். அரசியல் டிரெண்டிங்கை பொறுத்தவரை திமுக தலைவர் ஸ்டாலின் முன்னணியில் உள்ளார்
முக ஸ்டாலின் எனும்நான் என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் ஏராளமானோர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதன்பின்னர், இந்திய அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் கமல் முதல் இடத்தில் இருந்து வருகிறார். கமலஹாசன், கோவைதெற்கு, வானதி போன்ற ஹேஷ்டாக்குகள் உருவாக்கப்பட்டு டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளன.
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கமல் மற்றும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
தற்போது வெளியான முடிவின் படி கமலஹாசனை 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வெற்றிப்பெற்றுளார்.